தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், அங்கு நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையடுத்து ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் தனுஷுடன் தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா மற்றும் சர்க்கார், சூர்யா உடன் தானா சேர்ந்த கூட்டம்,

சியான் விக்ரமுக்கு ஜோடியாக சாமி ஸ்கொயர் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது மகாநடி தான். 

முதன்முறையாக பிகினி உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி

சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் திறம்பட நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார் கீர்த்தி.

மகாநடி படத்துக்கு முன்பு வரை கமர்ஷியல் படங்களில் அதிகம் நடித்து வந்த இவர், அப்படத்திற்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார்.